News April 16, 2025

NLC நிறுவனத்தில் வேலை

image

NLC நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Overman & Mining Sirdar பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 171 காலி பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம். Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். SHARE பண்ணுங்க

Similar News

News April 21, 2025

விழுப்புரத்தில் எஸ்.ஐ. தேர்வுக்கு இலவச பயிற்சி

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றுமுதல்(ஏப்.21) சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகி பதிவு செய்ய வேண்டும் ஷேர் பண்ணுங்க…

News April 21, 2025

அரசு பஸ் மோதி பட்டதாரி வாலிபர் பலி

image

திண்டிவனம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால்(23). இவர், திண்டிவனத்தில் உள்ள பேக்கரியில் பகுதி நேர பணி செய்து வந்தார். நேற்று நான்கு முனை சந்திப்பில் பைக்கில் சென்றபோது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2025

இது இல்லைனா அபராதம் தான்

image

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே. 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!