News April 16, 2025

NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்

Similar News

News April 16, 2025

பொதுமக்களிடமிருந்து 19 மனுக்களைப் பெற்ற எஸ்.பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.கே. அருண்கபிலன் எஸ்.பி. பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

நாகை அஞ்சலகங்களில் காப்பீடு தொடங்கலாம்

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட முகாம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடக்கிறது. அஞ்சல் ஆயுள் காப்பீட்டை பட்டதாரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்த அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். அனைத்து காப்பீடுகளுக்கும் குறைந்த கட்டணமே பிரிமியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, என நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

நாகை:அஞ்சல் வழி பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விரும்பும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் இன்று முதல் மே 6ஆம் தேதி வரை www.tncuicm.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இதனை உடனடியான உங்கள் பகுதியினருக்கு Share செய்யுங்கள்..

error: Content is protected !!