News April 16, 2025
NLC நிறுவனத்தில் வேலை

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய இங்கு <
Similar News
News December 19, 2025
கடலூர் மாவட்டத்தில் நாளை கரண்ட் இருக்காது!

கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.20) பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக கடலூர் டவுன், செம்மண்டலம், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, செம்மங்குப்பம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, கோரணப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 19, 2025
கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

ஒரு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளின் அரவைக்கு எடுத்துச் செல்வது கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி சட்ட விரோத செயலாகும். எனவே சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகள் தங்களது கரும்புகளை வேறு சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

முன்னாள் படைவீரர்களுக்கு நடப்பாண்டில் “முதல்வரின் காக்கும் கரங்கள்“ திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.35,07,611 மானியத்துடன் கூடிய, ரூ.1,38,39,000 வங்கி கடனுதவி தொழில் தொடங்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு பிரத்யோக ஸ்கூட்டர் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


