News August 28, 2025

நிவேதா பெத்துராஜுக்கு விரைவில் டும் டும் டும்

image

தமிழில் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், ‘டிக் டிக் டிக்’, ‘சங்கத் தழிழன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். தெலுங்கிலும் ஒருசில படங்களில் நடித்த அவர், ஃபார்முலா ஒன் கார் பந்தய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை நிவேதா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மாடலிங் துறையில் உள்ள அவரது காதலரின் பெயர் ரஜித் இப்ராம்.

Similar News

News March 20, 2026

கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

image

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல, நாமே ஏற்படுத்திக் கொள்வது. *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே சாட்டு. *கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம். *உண்மையைச் சொல்பவன் உறவை இழக்கிறான். உறவை விரும்புபவன் உண்மையை இழக்கிறான். *மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.

News March 20, 2026

கத்தார் மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

image

கத்தாரின் <<19423057>>எரிசக்தி நிறுவனங்கள்<<>> மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு PM மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கத்தார் PM ஷேக் தமிம் பின் ஹமாத்திடம் அவர் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். அப்போது, அங்குள்ள இந்தியர்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி கூறிய PM மோடி, அப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலவ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News March 20, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 638
▶குறள்:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
▶பொருள்: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

error: Content is protected !!