News September 17, 2025
இளைஞர்கள் வாக்குகளை குறிவைக்கும் நிதிஷ்

பிஹாரில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அம்மாநில CM நிதிஷ், இளைஞர்களின் வாக்குகளையும் குறிவைத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கல்விக்கடன் அனைத்துக்கும் வட்டி தள்ளுபடி, கல்விக்கடன் திருப்பி செலுத்தும் அவகாசம் 5-லிருந்து 7 ஆண்டுகளாக நீட்டிப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளார். இதேபோல் தான், தமிழகத்திலும் தேர்தல் நேரத்தில் பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது
Similar News
News September 17, 2025
ஷூவை புதுசுபோல மாற்ற உதவும் உருளைக்கிழங்கு

ஷூ க்ளீன் பண்றது பலருக்கும் பெரும் தலைவலியாய் இருக்கும். அடிக்கடி தண்ணீரில் போட்டு கழுவினா ஷூ கிழிந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளவர்களுக்காகவே, ஒரு ட்ரிக்க கண்டுபிடித்துள்ளனர். முதலில் ஷூவை துணியை வைத்து நன்றாக துடைக்க வேண்டும். பின்னர் ஒரு உருளைக் கிழங்கை பாதியாக கட் பண்ணி, அழுக்கு இருக்கும் இடத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். நீங்கள் தேய்க்க தேய்க்க அழுக்கு இருந்த இடம் தெரியாமல் நீங்கிவிடும்.
News September 17, 2025
பாஜக கூட்டணியில் மாற்றங்கள் வருகிறது: நயினார்

புயலுக்கு பின் அமைதி போல தங்கள் கூட்டணி பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என NDA கூட்டணி சலசலப்பு குறித்து நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதாகவும், கடைசி நிமிடங்களில் கூட கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ADMK, PMK உள்கட்சி விவகாரங்கள் பாஜக தலையிடாது எனவும் கூறியுள்ளார்.
News September 17, 2025
போட்டோ ஷூட்டுக்கு பை பை சொன்ன AI

முதல்ல பிரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங், பேபி போட்டோ ஷூட் அலப்பறைகள் சோஷியல் மீடியாவில் அதிகமாக இருந்தது. அந்த அலப்பறைகளுக்கு இப்போ AI முடிவுகட்டியுள்ளது. Costume, Background சொல்லி நம்ம போட்டோவா AI தொடர்பான APP-களில் அப்லோட் பண்ணா போதும். விதவிதமான போட்டோஸை AI அள்ளி கொடுத்துவிடும். அதன் சாம்பிள்தான் இன்ஸ்டாவில் கொட்டிக்கிடக்கும் GEMINI எடிட்டடு போட்டோஸ். இனிமே எதுக்கு போட்டோஷூட்?