News December 28, 2024

தந்தையை EMOTIONAL ஆக்கிய நிதிஷ் ரெட்டி

image

AUSக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டின் இன்றைய போட்டியில், நிதிஷ்குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தினார். இது குறித்து அவரது தந்தை முத்யாலா ரெட்டியிடம் கேட்டதற்கு, தங்கள் குடும்பத்திற்கு இது சிறப்பு வாய்ந்த தினம் எனவும், இந்த நாளை வாழ்நாளில் மறக்க முடியாது எனவும் உணர்ச்சிப்பொங்க தெரிவித்தார். மேலும், சிறு வயது முதலே சிறப்பாக ஆடியவன், தற்போது சர்வதேச போட்டியிலும் சிறப்பாக ஆடுவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

Similar News

News March 8, 2026

‘Women is Worth & Earth’ விஜய்க்கு பார்த்திபன் பதிலடி!

image

சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு Women என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ‘It’s worth! Worth & Worth Because women is another Earth’ எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று, தவெக மகளிர் தின விழாவில் தனது மனைவி சங்கீதா விவகாரத்தை <<19322295>>Worth இல்லை <<>>என மறைமுகமாக பேசிய விஜய்க்கு இது பதிலடி என நெட்டிசன்கள் SM-ல் கருத்து கூறி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News March 8, 2026

இன்று ஒரு நாள் கொண்டாடி விட்டால் போதுமா..?

image

இன்று முழுவதும் பெண்களுக்கு வாழ்த்துகள்தான்! ஆனால் சமூகத்தில் அவர்களுக்கு சம உரிமை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதா? இன்னும் சில கிராமங்களில் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை தரும் மனப்போக்கு தொடர்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் அரங்கேற போகிறது? வாழ்த்துகளால் அல்ல, சமத்துவத்தால் தான் பெண்கள் தினம் முழுமை பெறும் என்பதை இந்த சமூகம் உணரப்போவது எப்போது?

News March 8, 2026

இன்று பைனல்.. உச்சம் தொட்ட கட்டணம்!

image

பெரிதும் எதிர்பார்க்கப்படும் WC T20I இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரை நோக்கி படையெடுத்துள்ள நிலையில், ஹோட்டல் ரூம் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒரு இரவு தங்குவதற்கு ₹18 ஆயிரம் முதல் ₹80 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறதாம். அதே போல முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

error: Content is protected !!