News October 21, 2025

நிதிஷ் ரெட்டி 3 பார்மட் வீரர்: ரோஹித் சர்மா

image

இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி எல்லா பார்மட்களிலும் சிறந்த வீரராக வருவார் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI-ல் நிதிஷ் அறிமுகமான போது, அவருக்கு ரோஹித்தான் தொப்பியை கொடுத்து கவுரவித்தார். பின்னர், இந்திய அணியில் நீண்ட தூரம் பயணிக்கும் திறமை நிதிஷுக்கு உள்ளதாகவும், இந்திய அணி அவருக்கு எப்போது துணையாக இருக்கும் எனவும் கூறினார்.

Similar News

News October 21, 2025

9 Rules தான்; எடை குறைப்பு Easy!

image

உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்புடன் இருக்க ஆரோக்கியமான டயட்டுடன், போதிய உடற்பயிற்சியும் அவசியம். அப்படி எடையை குறைக்க நீங்க போராடிட்டு இருக்கீங்களா? கவலையவிடுங்க. உங்கள் உடல் எடையை குறைக்க 9 விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. அவை என்ன என்பதை தெரிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. Healthy Lifestyle-ஐ அனைவரும் பின்பற்ற SHARE பண்ணுங்க.

News October 21, 2025

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்வு!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 116(₹10,203) டாலர்கள் உயர்ந்துள்ளது. இதனால் இன்று 4,461 டாலர்களுக்கு விற்பனையாகிறது. கடந்த 18-ம் தேதி 45 டாலர்கள் குறைந்த நிலையில், நேற்று 44 டாலர்கள், இன்று 116 டாலர்கள் என மீண்டும் ஏறுமுகத்தைக் கண்டுள்ளது. இது மேலும் தொடர்ந்தால், இந்தியாவில் மீண்டும் தங்கம் விலை உயர்வைச் சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

News October 21, 2025

நெல்சன் வரிசையில் RJ பாலாஜி.. கருப்பு Expectations

image

தனது பட தயாரிப்பாளர்கள், ‘புளூ சட்டை மாறனை’ விட பயங்கரமாக விமர்சிக்கக் கூடிய வகையில் படத்தை பார்ப்பவர்கள் என RJ பாலாஜி கலாய்த்துள்ளார். ஆனால், அவர்களே ‘கருப்பு’ படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர் என நெகிழ்ந்துள்ளார். மேலும் படம் குறித்து பில்டப் கொடுக்க விரும்பவில்லை என்றும் கூறினார். ‘தக் லைஃப்’, ‘கூலி’ பட படுதோல்விக்கு பிறகு நெல்சனும் இதையே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!