News March 13, 2025
நிதிஷ் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருகிறார்: ராப்ரி

பிஹார் CM நிதிஷ்குமார் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருவதாக ஆர்ஜேடி மூத்த தலைவர் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் நிலையானவராக இல்லை என்றும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏக்களை நிதிஷ், தேஜ கூட்டணி கட்சியினர் அவமதிப்பதாக கூறி, ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News March 13, 2025
தினமும் நீங்க சிக்கன் சாப்பிடுறீங்களா?

சிக்கன் பிடிக்காத அசைவ பிரியர்களே இருக்க முடியாது. ஆனால், தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து எலும்பு, மூட்டு பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதயநோய் வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
News March 13, 2025
4 நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: IMD வார்னிங்

தமிழகத்தில் இன்று அடுத்த 4 நாட்களுக்கு, வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
News March 13, 2025
இன்றைய பொன்மொழிகள்!

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
* பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ் – விவேகானந்தர்.