News April 3, 2025
புதிய அவதாரம் எடுக்கும் நித்தியானந்தா…!

கைலாசா நாடு இருப்பதையே பலரும் ஏற்கவில்லை. அதற்குள் நித்தியானந்தா உயிருடனேயே இல்லை என்ற செய்தியும் பரவியது. இதனால், அவர் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அப்போது, உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் 2 வருடமாக ஈடுபட்டு வருவதால், நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்து, ‘என் தலைவன் AI வரைக்கும் போயிட்டார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Similar News
News April 4, 2025
ரஹானே – ஜெய்ஸ்வால் இடையே மோதலா?

மும்பை அணியின் கேப்டன் ரஹானேவுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே, <<15968321>>ஜெய்ஸ்வால் <<>>அணி மாறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெளியாகும் செய்திகளின்படி, ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக, ஜெய்ஸ்வால் சரியாக விளையாடாததை தொடர்ந்து, அவரை கேப்டன் ரஹானே மற்றும் அணியின் கோச் சால்வி விமர்சித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஜெய்ஸ்வால், ரஹானேவின் ‘கிட்’ பேக்கை எட்டி உதைத்தார் என்றும் கூறப்படுகிறது.
News April 4, 2025
சீரியல் நடிகர் ஐயப்பன் உன்னி மீது மனைவி பரபரப்பு புகார்!

பிரபல சீரியல் நடிகர் ஐயப்பன், கடந்த 3 மாதங்களாக வீட்டுக்கு வருவதில்லை என அவரது மனைவி பிந்தியா போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், கடந்த 3 வருடமாக தன்னையும் குழந்தையையும் அவர் சரியாக கவனிப்பதில்லை என்றும், குடும்ப செலவுக்கு பணம் தராமல் அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஐயப்பன் கனா காணும் காலங்கள், தென்றல், கயல் போன்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தார்.
News April 4, 2025
மக்கள் பிரச்னையை பேசக் கூடாதா? இபிஎஸ் கொந்தளிப்பு

பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் இபிஎஸ் உள்பட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் இபிஎஸ் பேசுகையில், பேரவையில் மக்கள் பிரச்னைகளைப் பேச அனுமதியில்லை. 10 நாள்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சகித்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.