News April 2, 2025
நேரலையில் வருகிறார் நித்தியானந்தா…!

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் நேரலையில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை(ஏப்.3) அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பேசவுள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஜிப்லி டிசைனில் நித்தியானந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு, அனைவரும் காத்திருந்த தருணம் இறுதியாக வந்துவிட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது நடிப்பில் ‘கருப்பு’ உள்ளிட்ட 3 படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இதுவரை 75 படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 3 மாதங்களாக புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லையாம். இது த்ரிஷாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
News March 17, 2026
பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப வேண்டுமா?

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணங்கள் இன்றி ₹50,000-க்கும் மேல் பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் எதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது என எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணம் இல்லை என்பதை உறுதிசெய்த பின், அதிகாரிகள் பணத்தை கொடுத்துவிடுவர்.
News March 17, 2026
99660 44425.. இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுங்க!

உங்களின் PF நிதியில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை அறிய Website-ல் Log In செய்து கஷ்டப்பட வேண்டாம். ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ளலாம் தெரியுமா? PF-ல் ரெஜிஸ்டர் செய்துள்ள போன் நம்பரில் இருந்து ‘99660 44425’ என்ற நம்பருக்கு ஒரு Missed Call கொடுங்க. உங்களின் PF பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்ற மெசேஜ் வந்துவிடும். பலரும் அறியாத இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.


