News August 5, 2024
கண்ணீர் விட்டு அழுத நிஷா தாஹியா

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியால், இந்திய வீராங்கனை நிஷா தாஹியா கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை வேதனையடையச் செய்துள்ளது. காலிறுதி போட்டியில் வடகொரிய வீராங்கனையை எதிர்கொண்ட அவர், 10-8 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். காயம் காரணமாக பின்னடைவை சந்தித்த நிலையில், தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகிறார்.
Similar News
News April 3, 2026
இந்திய மருந்துகளுக்கு 100% வரி… டிரம்ப் அறிவிப்பு

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Patented மருந்துகளுக்கு ஜூலை 31 முதல் 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து Generic மருந்துகளே USA-வுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதால் தற்போதைக்கு பாதிப்பு குறைவே. ஆனால், USA-வுக்கு உற்பத்தியை மாற்றாத நிறுவனங்களின் ஜெனரிக் மருந்துகளுக்கும் விரைவில் வரி உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.
News April 3, 2026
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாற்றம்

நாதக பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஜான்சி ராணி, வேட்புமனு தாக்கல் செய்தபோது திமுகவுக்கு ஆதரவான சில கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அத்தொகுதிக்கு சுகன்யா என்பவரை புதிய வேட்பாளராக சீமான் அறிவித்துள்ளார். ஒரே இரவில் நடந்த இம்மாற்றத்தால் ஜான்சி ராணி அதிர்ச்சியில் உள்ளாராம். எனவே, அவர் மாற்றுக் கட்சியில் இணையலாமா என ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
News April 3, 2026
கருணாநிதியை கைதியாக வைத்திருந்த ஸ்டாலின்: EPS

திமுகவின் இறுதி அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதுவதாக EPS கூறியுள்ளார். கருணாநிதியின் இறுதிக்காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியாக வைத்திருந்தார் என ஆ.ராசா பேசியதாக <<19548289>>ஆடியோ<<>> வெளியாகி வைரலானது. இதை சுட்டிக்காட்டி பேசிய அவர், அப்பாவையே அப்படி வைத்தவர் மக்களை எப்படி வைப்பார் என்றார். மேலும், ஸ்டாலினுடன் பிரச்னை ஏற்பட்டதால்தான் தேர்தலில் போட்டியிட கனிமொழிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


