News February 1, 2025

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8ஆவது பட்ஜெட்

image

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 8ஆவது பட்ஜெட் ஆகும். இதன்மூலம் தொடர்ந்து அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்னும் பெருமையை பெறுகிறார். அவருக்கு அடுத்து மொரார்ஜி தேசாய் (தொடர்ந்து 6 முறை), மன்மோகன்சிங், அருண்ஜெட்லி, ப.சிதம்பரம், யஸ்வந்த் சின்ஹா (5 முறை) பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

Similar News

News March 4, 2026

திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்..

image

IndiGo விமான பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி <<19289115>>பிரபாகரனை <<>>நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தை டிடிவி, அன்புமணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக கையில் எடுத்து, திமுகவை கடுமையாக அட்டாக் செய்தனர். சோஷியல் மீடியாவிலும் இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது.

News March 4, 2026

போரால் சிக்கித் தவிக்கும் ரொனால்டோ

image

கால்பந்து வீரர் ரொனால்டோ, போர் பதற்றம் காரணமாக சவுதியில் இருந்து குடும்பத்துடன் பிரைவேட் ஜெட்டில் வெளியேறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அது உண்மையில்லை என அல்-நாசர் எஃப்சி தெரிவித்துள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். எனவே இந்த நேரத்தில் அவரால் வேறு இடத்திற்கு செல்லமுடியாது என கால்பந்து க்ளப் விளக்கமளித்துள்ளது.

News March 4, 2026

பங்குச்சந்தை சரிந்தது.. மிகப்பெரிய தாக்கம்

image

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,723 புள்ளிகள் சரிந்து 78,521 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 476 புள்ளிகள் சரிந்து 24,600 புள்ளிகளில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!