News November 16, 2024

துளசிக்கு நிர்மலா சீதாராமன் வாழ்த்து

image

அமெரிக்க உளவுத்துறை இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 21 ஆண்டுகளாக ராணுவ வீராங்கனையாக சேவை செய்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாகவும், அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பு தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வான முதல் இந்து பெண் என்ற பெருமை பெற்றவர் துளசி.

Similar News

News March 1, 2026

விஜய்யின் சொத்து இவ்வளவு கோடியா..!

image

விவாகரத்து மனுவில் சங்கீதா ஜீவனாம்சம் கோரிய நிலையில், விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு என SM-ல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு சுமார் ₹600 கோடி என TOI தெரிவித்துள்ளது. நீலாங்கரை பங்களா, 10 நிறுவனங்களின் விளம்பர தூதர், ரோல்ஸ் ராய்ஸ், BMW X5 & X6, Audi A8 L, Mercedes Benz GLA உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களும் இதில் அடங்கும்.

News March 1, 2026

USA, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்: புடின்

image

கமேனியின் மறைவுக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு எழுதிய கடிதத்தில் அவர், இந்த படுகொலையை ’காட்டுமிராண்டித்தனமான செயல்’ என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அறநெறி மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி கமேனி கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் ஈரான் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.

News March 1, 2026

ஜெயலலிதா படத்தை மாற்றியது ஏன்? OPS பதில்

image

திமுகவில் இணைந்த OPS தனது காரில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் போட்டோவை எடுத்துவிட்டு ஸ்டாலின் படத்தை வைத்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என சொன்னவர் பதவிக்காக இப்போது அவரை மறந்துவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது. தற்போது திமுகவில் இணைந்திருப்பதால் ஸ்டாலினின் படத்தை வைப்பதில் தவறில்லை என பதில் அளித்துள்ளார்.

error: Content is protected !!