News August 7, 2024
வரிமுறையில் மாற்றம் செய்தார் நிர்மலா சீதாராமன்

ஜூலை 23, 2024க்கு முன் வாங்கிய ரியல் எஸ்டேட், பங்குகள் ஆகியவற்றிற்கு LTCG வரியை பழைய முறை, புதிய முறை இரண்டிலும் கணக்கிடலாம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில், நீண்டநாள் மூலதன லாபம் (LTCG) மீதான வரியை இன்டெக்சேஷன் முறையை நீக்கிவிட்டு 12.5%ஆக குறைத்தார் நிதியமைச்சர். ஆனால், இது அதிகம் என்று பலர் சொன்னதால், பழைய முறையில் கணக்கிட்டுக் கொள்ள அனுமதியளித்திருக்கிறார்.
Similar News
News August 18, 2025
திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை: வேல்முருகன்

திமுக கூட்டணி தலைவர்கள் யாரும் ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியை உடைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது என்றும் தெரிவித்துள்ளார். தான் சட்டப்பேரவையில் கோபமாக பேசினாலும், திமுக அமைச்சர்கள் அதற்குரிய பதிலை அளித்தனர் என்றார்.
News August 18, 2025
பிரபல நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப் காலமானார்!

60 ஆண்டுகளாக ஹாலிவுட் படங்களில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப்(87) காலமானார். இவர் உலக புகழ் பெற்ற சூப்பர்மேன்(1978) & சூப்பர்மேன் 2(1980) படங்களில் General Zod கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். சில ஆண்டுகள் முன்பு, டெரன்ஸ் இந்தியாவிற்கு வந்து யோகா பயிற்சி பெற்றார். அவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 18, 2025
மாநாட்டுக்கு பள்ளி மாணவர்கள் வர வேண்டாம்: விஜய்

தவெக மாநாட்டுக்கு 2 நாள்களே இருக்கும் நிலையில், விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் மாநாட்டில் பங்கேற்க வர வேண்டாம். வீட்டில் இருந்தபடியே மாநாட்டை நேரலையில் காணுங்கள். அதேபோல், தவெக தொண்டர்கள் மாநாட்டுக்கு வரும்போதும், திரும்பும்போதும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.