News October 4, 2025
நீரவ் மோடிக்கு சகல வசதிகளும் கொண்ட சிறை

நீரவ் மோடியிடம் ₹13,000 கோடி PNB வங்கி மோசடி குறித்து விசாரிக்கப்பட மாட்டாது என UK அரசிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது. மேலும், சகல வசதிகளையும் கொண்ட தரமான சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு, நீரவ் மோடியை நாடு கடத்த UK கோர்ட் தயக்கம் காட்டியது. இதேபோல், பெல்ஜியத்தில் உள்ள அவரது உறவினர் மெகுல் சோக்ஸிக்கும் இந்திய அரசு உறுதியளித்தது.
Similar News
News March 17, 2026
நினைவாற்றலுக்கு உதவும் இசை!

இசை கேட்பது மனதுக்கு அமைதியையும் தருகிறது. அதே நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இசையை தொடர்ந்து கேட்பவர்களிடையே நினைவாற்றல் மேம்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தினமும் இசை கேட்பதால், அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அதனால் உங்கள் வீட்டில் முதியோர் இருந்தால் மறக்காம தினமும் பாட்டு போடுங்க. SHARE IT.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்தது: நயினார்

சேலத்தில் மூதாட்டி ஒருவரை கஞ்சா போதையில் 2 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டதாகவும், TN குற்றங்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திறனற்ற திமுக ஆட்சியால் தேர்தல் காலத்தில் கொடூர குற்றங்கள் தொடர்வதாக அவர் விமர்சித்துள்ளார்.