News September 23, 2025
இரவா? பகலா?

நார்வே நாட்டில் உள்ள சோமரோய் என்னும் சிறிய தீவில் ஒவ்வொரு கோடை காலங்களில் 69 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை (Midnight Sun). குளிர் காலத்தில் சூரியன் உதிப்பதில்லை (Polar Night). இந்த ஊரில் கடிகாரம் இல்லை. இங்கு வாழும் மக்களுக்கு நேரம் ஒரு பொருட்டல்ல. உங்களுக்கு இந்த தீவில் வாழ ஆசையா இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 23, 2025
விஜய்யை திமுக முடித்துவிடும்: ராஜேந்திர பாலாஜி

தனித்து தேர்தலில் போட்டியிட்டால் திமுக விஜயை முடித்துவிடும் என ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். EPS துணையில்லாமல் தவெக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்தின் தொண்டர்கள் போல, விஜய்யின் தொண்டர்கள் பக்குவம் அடையவில்லை என தெரிவித்த அவர், அரசியல் களத்தில் தவெக பெரும் தடுமாற்றத்தை சந்திக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 23, 2025
வீட்டில் உள்ள பெண்கள் என்ன செய்கிறார்கள்?

’வீட்டுல சும்மாதான இருக்க, இத செஞ்சிடு’ – இல்லத்தரசிகளிடம் நாம் சர்வசாதாரணமாக சொல்லும் விஷயம் இது. நாம் சொல்வதை போல அவர்கள் ஒருநாள் சும்மா இருந்தா என்னாகும்? பெண்கள் வீடுகளில் செய்யும் வேலைகளை முக்கியமானதாகவே நாம் கருதுவதில்லை. வீட்டிலுள்ள பெண்கள் எவ்வளவு உழைக்கின்றனர் என்பதை மேலே உள்ள படம் உணர்த்துகிறது. பெண்களின் உழைப்பை பாராட்ட ஒரு லைக் போடலாமே. கருத்தையும் கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 23, 2025
மீண்டும் குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி தயார்

‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் 2 பாகங்களும் வசூலில் பட்டையை கிளப்பியதோடு, மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றன. இதை தமிழில் கமல்‘பாபநாசம். என்று ரீமேக் செய்து ஹிட் கொடுத்தார். ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கும் நிலையில் கொச்சியில் ‘த்ரிஷ்யம் 3’ நேற்று நடந்து முடிந்துள்ளது. ஜார்ஜ் குட்டி குடும்பத்தை காப்பாற்றும் அடுத்த அத்தியாயத்தை விரைவில் திரையில் காணலாம்.