News May 20, 2024
சென்னையில் இரவு மழை

தலைநகர் சென்னையில் இரவு முழுவதும் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தென் மாநிலங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்து வருகிறது. ஆனாலும், சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு பெய்த மழை பூமியை குளிர வைத்துள்ளது. இதனால், சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Similar News
News March 7, 2026
வேட்புமனுவை வாபஸ் வாங்கினார் சௌமியா

அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வாகவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை வாபஸ் வாங்கிய சௌமியா, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 7, 2026
ஈரான் போர்.. இந்தியாவில் இதன் விலை குறைகிறது

இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியில் 72% மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது அங்கே போர்ச்சூழல் நிலவுவதால் 2 லட்சம் டன் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலிருந்து கப்பல்களில் கொண்டுசெல்லப்பட்ட மேலும் 2 லட்சம் டன் அரிசியும் பாதிவழியிலேயே நிற்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவில் அதன் விலை 7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் குறையலாம்.
News March 7, 2026
விலை உயராது.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹60-ம் உயர்ந்தது. சிலிண்டர் உயர்வால், டீ, காபி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டீ, காபிகளின் விலை உயராது என்று பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


