News January 13, 2026
Night முழுக்க சார்ஜ் போடுறீங்களா? உஷார்!

காலையில் எழுந்ததும் 100% சார்ஜ் இருக்கணும் என எண்ணி, இரவு முழுவதும் போனை சார்ஜ் போடுகிறோம். அப்படி செய்வதால் பேட்டரியின் செயல்திறன் குறையுமாம். தற்போது, போன்களில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரி நவீனரகம் என்றாலும், அதன் செயல்திறனுக்கும் ஓர் எல்லை உண்டு. நீண்ட நேரம் போன் சார்ஜில் இருந்தால், செயல்திறன் பாதிப்பதோடு, சமயங்களில் பேட்டரி சூடாகி, வெடிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. SHARE.
Similar News
News February 14, 2026
5 பேரின் உயிரை காப்பாற்றிய 10 மாத குழந்தை!

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 5 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. அலின் ஷெரின் ஆபிரஹாம் என்ற அந்த குழந்தையின் இதய வால்வு, கல்லீரல், கிட்னி, கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் கேரளாவில் மிக இளம் வயதில் உடலுறுப்பு தானம் செய்த குழந்தை என்ற பெயர் கிடைத்துள்ளது. இதனையடுத்து அலின் பெற்றோருக்கு கேரள அரசு நன்றி தெரிவித்துள்ளது.
News February 14, 2026
அண்ணா பல்கலை.யில் குவியும் வேலைவாய்ப்பு

நடப்பாண்டில் அண்ணா பல்கலை.யில் நடந்த Campus Interview-ல் பங்கேற்ற 2,450 பேரில் 1,100 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. குறிப்பாக CS, CSE, IT பிரிவில் 95% பேருக்கும், என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கலில் 70% பேருக்கு வேலை கிடைத்திருக்கிறதாம். ஆரம்ப சம்பளமே ஆண்டுக்கு ₹3.50 லட்சத்தில் தொடங்கி ₹53 லட்சம் கொடுக்கும் வேலையிலும் மாணவர்கள் செலக்ட் ஆகியிருக்கிறார்கள்.
News February 14, 2026
மகளிருக்கு ₹5000.. சர்ப்ரைஸ் கொடுக்க இதுதான் காரணமா?

மகளிருக்கு ₹5000-ஐ முன்னரே அறிவிக்காமல் சர்ப்ரைஸாக கொடுத்ததற்கான காரணத்தை அமைச்சர் ரகுபதி விளக்கியுள்ளார். இதை அறிவித்துவிட்டு செய்திருந்தால், எதிர்கட்சியினர் உடனே நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு வாங்கிவிடுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதனால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ₹5,000 -ம் கிடைக்காமல் போய்விடும் என்ற அவர், எனவேதான் எதையும் அறிவிக்காமல் CM அதிகாலையிலேயே சர்ப்ரைஸ் கொடுத்தார் என்றார்.


