News June 27, 2024
நிஃப்டி 24,000 புள்ளிகளை கடந்து சாதனை

கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன. இதனையடுத்து, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 24,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் 8,000 புள்ளிகள் வரை சரிந்த நிஃப்டி, நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அதாவது, 2020 ஏப்ரலில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 3 லட்சம் ரூபாய்.
Similar News
News January 7, 2026
குடியரசு தினத்துக்கு 3 நாள் விடுமுறை.. HAPPY NEWS!

மக்களே, பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர் விடுமுறை வராதே என வருத்தமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். ஜனவரி மாத இறுதியில் 3 நாள் தொடர் விடுமுறை கிடைக்கப்போகுது. ஜன. 26 குடியரசு தினம் திங்கள்கிழமையில் வருகிறது. இதனால் இதற்கு முன்னதாக வரும் சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் முழுசாக 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஜாலியா இருங்க!
News January 7, 2026
தமிழகம் வருகிறார் PM மோடி

TN சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜன.28-ம் தேதி PM மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக மாநாட்டில் PM பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் NDA கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
அமித் ஷாவா? அவதூறு ஷாவா? CM ஸ்டாலின் விளாசல்

தமிழ்நாட்டில் இந்து மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய அமித் ஷாவுக்கு CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் அரசு விழாவில் பேசிய அவர், TN-ல் கடந்த 4 ஆண்டுகளில் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதை பாஜக ஆளும் மாநிலங்களில் கூட செய்திருக்க மாட்டார்கள் என்றார். மேலும் இப்படி பொய் குற்றச்சாட்டை வைத்தவர் அமித் ஷாவா, அவதூறு ஷாவா என கேட்க தோன்றுவதாக CM பேசினார்.


