News March 16, 2024
பொல்லார்டுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி

பொல்லார்டுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், பொல்லார்டுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், சில பந்தங்கள் தனது சகோதரனை ஒருபோதும் மாற்றாது, வலுப்படுத்தவே செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் குஜராத் அணி கேப்டனாக இருந்த பாண்டியா, நடப்பு தொடரில் மும்பை அணியை வழிநடத்த உள்ளார்.
Similar News
News October 30, 2025
PCB-யிடம் முரண்டு பிடிக்கும் ரிஸ்வான்

ODI கேப்டன் பொறுப்பிலிருந்த நீக்கப்பட்ட பாக்., வீரர் முகமது ரிஸ்வான், தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், பாக்., கிரிக்கெட் வாரியத்தின் (PCB) மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரிஸ்வான் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் & டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை PCB-யிடம் அவர் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News October 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 30, 2025
ராகுல் பேசும்போதெல்லாம் தாமரை மலர்ந்தது: அமித்ஷா

ஓட்டுக்காக PM மோடி டான்ஸ் கூட ஆடுவார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு தேர்தலில், ராகுல் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் தாயாரை ராகுல் அவமதித்தார், பலமுறை இழிவான முறையில் பேசியுள்ளார் என்றும் கூறினார். ஆனால், ராகுல் இவ்வாறு இழிவாக பேசும் ஒவ்வொரு முறையும் தாமரை மலர்ந்துள்ளது என்று அமித்ஷா தெரிவித்தார்.


