News August 20, 2025
தமிழகம் முழுவதும் NIA சோதனை

கொடைக்கானல், தென்காசி ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் NIA சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக, திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள ஷேக் அப்துல்லா (SDPI), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த யூசிப் ஆகியோரது வீடுகளிலும் NIA சோதனை நடைபெற்று வருகிறது. பாமகவின் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இச்சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் NIA சோதனை நடத்தியது.
Similar News
News January 16, 2026
காற்று மாசால் தலைநகரில் 9,000 பேர் பலியா?

தலைநகரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2024-ல் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,211-ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இது 2023-இல் பதிவான 8,801 உயிரிழப்புகளை விட அதிகம். ஆஸ்துமா, நிமோனியா போன்ற சுவாசக் கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024-ஐ விட 2025-ல் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.
News January 16, 2026
NDA கூட்டணியில் தேமுதிக, OPS இல்லையா?

NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கான வரவேற்பு பதாகையில், அன்புமணி, ஜி.கே.வாசன், TTV, ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் <<18871079>>போட்டோஸ் <<>>இடம்பெற்றுள்ளன. ஆனால், பிரேமலதா, OPS, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் போட்டோஸ் இடம்பெறவில்லை. இதன்மூலம், NDA கூட்டணியில் தேமுதிக, அதிமுக தொண்டர்கள் உரிமை கழகம், புதிய தமிழகம் தற்போதுவரை இடம்பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
News January 16, 2026
‘அழியாத மை’ சர்ச்சை: ராகுல் காந்தி ஆவேசம்

மகாராஷ்டிர <<18870621>>உள்ளாட்சி தேர்தலில்<<>> பயன்படுத்தப்பட்ட <<18865381>>மை<<>> எளிதில் அழிந்து விடுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த செய்தியை குறிப்பிட்டு ECI-ஐ தாக்கியுள்ளார் ராகுல் காந்தி. இது தொடர்பான எக்ஸ் பதிவில், தேர்தல் ஆணையம் குடிமக்களை குழப்புவதன் மூலம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார். வாக்கை திருடுவது ஒரு தேசவிரோத செயலாகும் என்றும் அவர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.


