News April 10, 2025
தஹாவூர் ராணாவை காவலில் எடுக்க NIA தீவிரம்!

நாடு கடத்தப்பட்டு இன்று இந்தியா கொண்டு வரப்படும் தஹாவூர் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க NIA திட்டமிட்டுள்ளது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து நேற்று நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை மும்பை (அ) டெல்லி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முன்னதாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க NIA தீவிரம் காட்டி வருகிறது.
Similar News
News September 16, 2025
ASIA CUP: தொடரை விட்டே வெளியேறும் PAK?

கடந்த IND vs PAK போட்டி டாஸின் போது, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டின் தலையீடு அதிகமாக இருந்ததாக ICC-க்கு பாக்., கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. டாஸின் போது சூர்யா கைகொடுக்க மாட்டார் என தங்கள் கேப்டன் சல்மானிடம் கூறியதாகவும், இது தொடர்பாக இரு கேப்டன்களிடம் தனித்தனியாக அவர் பேசியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதனால் அவரை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என்றும் எச்சரித்துள்ளது.
News September 16, 2025
மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நயினார்

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ச்சியாக பாஜக விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என சொன்னீங்களே, செஞ்சீங்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பல கோடி செலவில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டும் திமுக, 4 ஆண்டுகளாக மீனவர்களுக்கென ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை என விமர்சித்துள்ளார்.
News September 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 16, ஆவணி 31 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 AM – 4:30 AM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.