News March 27, 2024
என்.ஐ.ஏக்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு புதிய டைரக்டர் ஜெனரலாக ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த்தை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது அதன் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் தின்கர் குப்தா, இம்மாதம் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து புதிய தலைவராக சதானந்த் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Similar News
News March 22, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, <<19433149>>தென்காசி, நெல்லை<<>> மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.1-ம் தேதி முழு ஆண்டு தேர்வும் தொடங்கவிருப்பதால் பள்ளி மாணவர்களிடையே சற்று குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT
News March 22, 2026
தமிழர்கள் அறிவியலில் சிறந்தவர்கள்: கிரண் ரிஜிஜு

தமிழகத்தில் நல்லாட்சி அமைந்தால் தமிழர்களால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் என ம. அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் பேசிய அவர், தமிழர்கள் தொழில்நுட்பக் கல்வி & அறிவியலில் சிறந்து விளங்குகிறார்கள் என்றார். அதேசமயம் சினிமாவையும், நடிகர்களையும் அவர்கள் மிகவும் நேசிக்கிறார்கள்; அவர்களுக்கு வழிபாட்டுக்குரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். உங்க கருத்து என்ன?
News March 22, 2026
மணப்பெண்ணை நிர்வாணம் ஆக்கும் வினோத வழக்கம்

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பினி கிராமத்தில் திருமணமான புதுமண தம்பதிகளுக்கென வினோத வழக்கம் ஒன்று நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது. திருமணமான பிறகு புதுமணப்பெண் 7 நாள்களுக்கு ஆடையின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும். அதேபோல், புது மாப்பிள்ளை மது அருந்தக் கூடாதென்பதே அந்த வழக்கம் ஆகும். இந்த வழக்கத்தை கடைபிடித்தால் 2 பேருக்கும் கடவுள் ஆசிர்வாதம் கிட்டும் என நம்பப்படுகிறது. உங்கள் கருத்து?


