News February 1, 2025
அடுத்த ஆண்டு பெரிய கலெக்ஷன் தான்

ஜிஎஸ்டி வரிவசூலை அதிகரிக்க இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாடு தழுவிய ஜிஎஸ்டி வரி வசூல் அளவு ரூ.10.6 லட்சம் கோடியாக உள்ளது. இந்நிலையில், 2025-26 நிதியாண்டில் ரூ.11.8 லட்சம் கோடியாக ஜிஎஸ்டி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.3% அதிகமாகும். பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் காலையில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் தற்போது 1 அவுன்ஸ்(28g) $45(₹4,138) குறைந்து $5,189-க்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 அவுன்ஸ் $3 குறைந்து $86-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 11, 2026
சிலிண்டருக்கு தமிழக அரசு 55% வரியா? Fact Check

சமையல் எரிவாயு விற்பனையில் TN அரசு 55%-ம், ஒன்றிய அரசு 5%-ம் வரி விதிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று TN Fact Check விளக்கமளித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே GST வரி விதிக்கப்படுகிறது. அதாவது சிலிண்டரின் விலை ₹827.14, மாநில அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%), மத்திய அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%) என மொத்தம் ₹868.5 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
News March 11, 2026
தமிழக தேர்தல் தேதி.. ECI சொன்ன புதிய தகவல்

அடுத்த 3 முதல் 5 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக ECI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 -4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.


