News July 4, 2024
‘ராயன்’ படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘ராயன்’ படத்தின் “ராயன் Rumble…” என்ற பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தனுஷின் 50ஆவது படமாக தயாராகிவரும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வடசென்னை கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Similar News
News September 22, 2025
செங்கல்பட்டு: சிட்லபாக்கம் ஏரியில் கிடந்த சடலம்

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பெரிய ஏரியில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிட்லபாக்கம் M.G.R., நகர், பகுதியைச் சேர்ந்த ஏகவள்ளி என்பது தெரியவந்தது.
News September 22, 2025
வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் வேலைக்கு செல்லும் வயதினரின்(15–59) எண்ணிக்கை 66%-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 100 பேரிலும் 66 பேர் வேலை செல்லக்கூடிய நபராக இருக்கிறார்களாம். குறிப்பாக, டெல்லியில் வேலைக்கு செல்லும் ஆண்களை(70.9%) விட பெண்களின் எண்ணிக்கை(70.9%) அதிகம். 1971-ல் 53%-ஆக இருந்த வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை, 2023-ல் 66.1%-ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என சொல்கின்றனர்.
News September 22, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

வட்டி விகிதத்தை RBI மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக SBI கணித்துள்ளது. புதிய GST-யால் விலை குறியீட்டு எண்(CPI) 65-75 bps குறையும். இதனால் 2004-க்கு பிறகு CPI 1.1%-க்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.29-ல் தொடங்கும் RBI-யின் பாலிசி கூட்டத்தில் வட்டி விகிதம் (தற்போது 5.5.%) குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தனிநபர், வாகன & வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் குறையும்.