News October 11, 2025
அடுத்து இந்த மாநிலங்களில் SIR பணிகள்

2026-ல் சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில், முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 5 மாநிலங்களோடு சேர்த்து மேலும் சில மாநிலங்களில் SIR பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆனால், 2026-ல் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் முதற்கட்ட SIR பணிகள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளனர்.
Similar News
News October 11, 2025
பிரான்ஸ் பிரதமராக மீண்டும் ஜெபஸ்டின்!

பிரான்ஸின் பிரதமராக ஜெபஸ்டின் லெகோர்னு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பம் காரணமாக கடந்த ஓராண்டில் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த செப்.9-ம் தேதி பிரதமராக பதவியேற்ற ஜெபஸ்டின், 27 நாட்களில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஜெபஸ்டினையே மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார்.
News October 11, 2025
பேங்க்ல ஆதாரை லிங்க் பண்ணியிருக்கீங்களா? உஷார்

உங்க பேங்க் அக்கவுண்டில் கண்டிப்பாக உங்க ஆதார்தான் லிங்க் ஆகியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கோங்க. இதை தெரிஞ்சிக்க, UIDAI போர்ட்டலில், My aadhaar சேவைக்கு செல்லவும். அதில், bank seeding status-ஐ கிளிக் பண்ணவும். லாக்-இன் செய்து செக் செய்தால், ஆதாருடன் எந்த பேங்க் அக்கவுண்ட் லிங்க் ஆகியிருக்கிறது என்பது காட்டும். வேறு அக்கவுண்ட் இருந்தால், அதனை நீக்கி, உங்க ஆதாருடன் லிங்க் செய்துவிடுங்கள்.
News October 11, 2025
BREAKING: இன்று ஒரே நாளில் ₹3,000 மாறியது

வெள்ளி விலை இன்று(அக்.11) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 1 கிராம் ₹3 உயர்ந்து ₹187-க்கும், பார் வெள்ளி 1 கிலோவுக்கு ₹3,000 உயர்ந்து ₹1,87,000-க்கும் விற்பனையாகிறது. <<17974250>>தங்கத்துடன்<<>> போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தைபோல் வெள்ளியின் மீது விழுந்ததே இதற்கு காரணமாம்.