News April 17, 2025
ADMK-ல் அடுத்தடுத்த மாற்றம்.. இபிஎஸ்-க்கு TTV ஆதரவு!

எதிரெதிர் துருவங்களாக இருந்த எடப்பாடியும், டிடிவி-யும் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது அதிமுகவினருக்கு நிம்மதியை அளித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை <<16121092>>இபிஎஸ் வாபஸ்<<>> பெற்றது, அதிமுக அழிந்துவிடாமல் இபிஎஸ் பாதுகாக்கிறார் என டிடிவி பேசியது என அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், ஓபிஎஸ், சசிகலாவும் விரைவில் அதிமுகவில் இணையலாம் எனத் தெரிகிறது.
Similar News
News April 19, 2025
JEE முதல்நிலை 2-ம் கட்டத் தேர்வு முடிவு வெளியானது!

JEE 2-ம் கட்ட முதல்நிலை(மெயின்) தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.19) வெளியானது. IIT, NIT போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் UG பொறியியல் படிப்புகளில் சேர JEE முதல்நிலை, முதன்மை என 2 கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த 2 – 9-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 8 லட்சம் பேர் எழுதிய நிலையில், அதன் முடிவுகள் <
News April 19, 2025
தொடரும் RCB-யின் சோகம்!

நடப்பு IPL தொடரில், இதுவரை 7 மேட்ச்சில் விளையாடி இருக்கும் RCB, அதில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தோல்வியடைந்த 3 மேட்சும் பெங்களூருவில் நடைபெற்ற போட்டிதான். வெளி கிரவுண்டில் வெற்றி பெற்ற அணியால், பாவம்…. சொந்த மண்ணில் ஒரு வெற்றியை கூட பெறமுடியவில்லை!
News April 19, 2025
செல்வத்தைப் பெருக்கும் மகாவிஷ்ணு காயத்ரி மந்திரம்!

மகாவிஷ்ணுவுக்கு உகந்த தினமான சனிக்கிழமையில் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லுங்க. வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மனநிம்மதி அடைந்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
‘ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்’