News April 3, 2024
நியூசி. அணிக்கு தலைமை தாங்கும் மைக்கேல் பிரேஸ்வெல்

நியூசிலாந்து அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டி20 வரும் 18ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. நியூசி. முன்னணி வீரர்களான வில்லியம்சன், சாண்ட்னெர், க்ளென் ஃபிலிப்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். இதனால் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் இந்த அணி களம் காண்கிறது.
Similar News
News August 18, 2025
டிரம்ப் உடன் பேசியது என்ன? மோடிக்கு விளக்கிய புடின்

அலாஸ்காவில் USA அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்து ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் எடுத்துரைத்ததாக PM மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போருக்கு சுமுக தீர்வு காண இந்தியா தொடர்ந்து முயன்று வருவதாகவும், இருநாட்டு உறவுகள்(இந்தியா – ரஷ்யா) தொடர்பாக வரும் நாள்களில் வளர்ச்சிக்கான பரிமாற்றங்கள் நடைபெறும் என்றும் தனது X பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
News August 18, 2025
இந்திய ரயில்வேயின் ஹைடெக் ஐடியா..!

பசுமை ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தண்டவாளங்களுக்கு இடையே சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பணிகள், வாரணாசியில் உள்ள பனாரஸில் தொடங்கியுள்ளது. அங்கு, 28 பேனல்கள் அமைத்து 15KWp மின்சாரம் தயாரித்து ரயில் இன்ஜின் இயக்கப்பட்டதாக X தளத்தில் ரயில்வே பதிவிட்டுள்ளது. நல்ல முயற்சி என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
News August 18, 2025
நாடு முழுவதும் முடங்கியது ஏர்டெல் சேவை

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இணைய சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 2500+ புகார்கள் ஏர்டெல் இணையத்தளத்தில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இடையூறுக்கு மன்னிப்பு கேட்ட ஏர்டெல் நிறுவனம், பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என விளக்கம் அளித்துள்ளது. உங்க சிம் வொர்க் ஆகுதா?