News August 6, 2025

முதலிரவு அறையில் சடலமாக கிடந்த புதுமணப்பெண்!

image

வாழ்க்கையை தொடங்க முதலிரவுக்கு ஸ்வீட் வாங்க சென்ற மாப்பிள்ளை வீடு திரும்பியபோது காலையில் தாலி கட்டிய மனைவி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சோகமான சம்பவம் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. மணமேடையில் புன்னகையுடன் இருந்த ஹர்ஷிதா(22) இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் தெரியாமல் மாப்பிள்ளை நாகேந்திரன், ஹர்ஷிதாவின் குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Similar News

News August 7, 2025

வெள்ளி விலை உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆக.4-ம் தேதி கிலோ வெள்ளி ₹1,23,000-ஆக இருந்த நிலையில், 3 நாளில் ₹4,000 அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயர்வை கண்டு வரும் தங்கம், வெள்ளி விலை, வரும் நாள்களில் குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News August 7, 2025

டிரம்புக்கு மறைமுக வார்னிங் கொடுத்த PM மோடி

image

இந்தியாவின் விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்களின் நலனே முதன்மையானது என PM மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்தியர்களின் நலனின் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது எனவும் அதற்காக அதிக விலை கொடுக்க நேரிடும் என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார். புதிய வரிவிதிப்பால் டிரம்ப், இந்தியாவை மிரட்டி வரும் நிலையில், அவருக்கு PM மோடி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

News August 7, 2025

SSI கொலை வழக்கில் என்கவுன்டர்.. Roundup ஸ்டோரி

image

மடத்துக்குளம் MLA மகேந்திரனின் தோட்டத்தில் மதுபோதையில் இருந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை விலக்கி விடச் சென்ற SSI சண்முகவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், மூர்த்தி, தங்கபாண்டி இருவரும் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை பிடிக்கும் முயற்சியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் <<17327420>>சுட்டு கொல்லப்பட்டதாக<<>> தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!