News October 24, 2024
நியூசிலாந்து அணி All OUT

புனேவில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 7, அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசி., தரப்பில் அதிகபட்சமாக கான்வே 76, ரச்சின் 65, சான்ட்னர் 33 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது.
Similar News
News November 28, 2025
FLASH: டிச.4-ல் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்

2 நாள்கள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார். 4-ம் தேதி அன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார். மறுநாள் 23-வது இந்தியா – ரஷ்யா ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக பிரச்னை நீடிக்கும் நிலையில், ரஷ்யா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு புடின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
News November 28, 2025
வெனிஸ் அழகை ரசித்த அஜித் பேமிலி (PHOTOS)

அண்மையில் இத்தாலியில் ஜென்டில்மேன் டிரைவர் விருதை, அஜித்துக்கு வழங்கி பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் கௌரவித்திருந்தது. இந்த விருதை பெற அஜித் தனது குடும்பத்துடன் வெனிஸ் சென்ற நிலையில், அந்த போட்டோஸை இப்போது ஷாலினி பகிர்ந்துள்ளார். வெனிஸ் நகரின் அழகியலோடு எடுக்கப்பட்டுள்ள அஜித் பேமிலி போட்டோஸ் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.
News November 28, 2025
மருத்துவ காலி பணியிடங்கள்: அன்புமணி Vs மா.சு.,

மருத்துவத்துறையில் 12,000 காலிபணியிடங்கள் இருப்பதாக <<18266345>>அன்புமணி<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜீரோ காலி பணியிடங்கள் என்ற வகையில் மருத்துவத்துறை செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 1.75 லட்சம் பேர் பணிபுரியும் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் எங்கே உள்ளது என்பதை ஆய்வு செய்து காட்டுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.


