News February 24, 2025
நியூசி.,க்கு 237 ரன்கள் டார்கெட்

ICC Champions Trophy: இன்று நியூசி.,க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77 ரன்கள் குவித்தார். அவர் மட்டும் நிலைத்து நிற்காமல் இருந்திருந்தால் அந்த அணி 200 ரன்களுக்கு கீழ் தான் இருந்திருக்கும். அதே நேரம், நியூசி., அணியில் அசத்தலாக பந்துவீசிய மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Similar News
News February 24, 2025
அமைச்சர் குழுவுக்கு ஆலோசனை கொடுக்கும் CM

தலைமை செயலகத்தில் CM ஸ்டாலினுடன் அமைச்சர் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விவகாரம் என்பதால், அரசு ஊழியர் சங்கங்களுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடந்த வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஆலோசனை வழங்குகிறார்.
News February 24, 2025
4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4 அன்று தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவராத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். குமரியில் இந்த 3 நாட்களுக்கு பதிலாக முறையே மார்ச் 8, 22 & ஏப்.12 ஆகிய தினங்கள் வேலைநாட்களாக இருக்கும்.
News February 24, 2025
சாமுத்திரிகா லட்சணம்: மச்சங்களும் அர்த்தங்களும்

*இடது தோளில்- பிடிவாத குணம் உடையவர். *முழங்கையில்- அமைதியின்மை. *வலது கன்னத்தில் – ஆதிக்கம் செலுத்தும் குணமுடையவர். *இடது கன்னத்தில்- முன்கோபத்தின் அடையாளம், சிந்தனையாளர். *காதின் மேல் அல்லது கீழ்ப்பகுதியில்- அறிவாளி. *நாக்கில் – உடல்நலம் மற்றும் பேச்சு தொடர்பான பிரச்னைகளில் சிக்குவீர்கள். *கழுத்தின் முன்பகுதி- அதிர்ஷ்டசாலி, பேச்சுத்திறமை, *கழுத்தின் பின்பகுதி- ஆக்ரோஷம்.