News March 26, 2025
பாகிஸ்தானை மீண்டும் ஊதி தள்ளிய நியூசிலாந்து

தொடர் தோல்வியால் துவண்டு போன பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. ஏற்கெனவே தொடரை இழந்த அந்த அணி கடைசி போட்டியிலும் சொதப்பியது. தொடக்கம் முதலே தடுமாறிய அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் டிம் சீஃபர்ட் 97 ரன்கள் விளாச 10 ஓவரில் நியூசிலாந்து எளிதாக வெற்றி பெற்று தொடரை 4 – 1 என கைப்பற்றியது.
Similar News
News December 1, 2025
இன்று சமந்தாவுக்கு 2-வது திருமணமா?

நடிகை சமந்தாவுக்கு இன்று 2-வது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் ராஜ் நிடிமொருவை அவர் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ராஜின் மனைவி, ‘Desperate people does desperate things’ என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
News December 1, 2025
இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யுங்க: சீமான்

டிட்வா புயலால் இலங்கையில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் வீடுகளை இழந்து, உணவுக்கு கூட வழியில்லாமல் கண்ணீருடன் தவித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும், உலகெங்கும் உள்ள தமிழர்கள், இயற்கையால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவவும் வேண்டுகோள் விடுத்தார்.
News December 1, 2025
14,967 பணியிடங்கள், ₹78,800 வரை சம்பளம்: முந்துங்க!

கேந்திரிய வித்யாலயா & நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாகவுள்ள 14,967 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, UG, PG உடன் B.Ed (பதவிகளுக்கேற்ப). சம்பளம்: ₹18,900 – ₹78,800 (பணிக்கு ஏற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <


