News January 1, 2025
புத்தாண்டு: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 2 ராசிகள்

புத்தாண்டில் சனி-சுக்கிரனின் பெயர்ச்சிகள் 2 ராசிகளை படாத பாடு படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 1) கன்னி: செலவுகள் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறாமல் மன அழுத்தம் உண்டாகும். உடல்நலனில் அக்கறை தேவை. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். 2) தனுசு: 3ஆம் வீட்டில் சுக்கிரன்-சனி இணைவதால் கடன் தொல்லை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் சண்டை – சச்சரவு உருவாகும். வார்த்தையில் கவனமாக இருப்பது நல்லது.
Similar News
News October 18, 2025
PAK-ன் காட்டுமிராண்டித்தனம்: ரஷீத் கான்

PAK தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலியான சம்பவத்தை ரஷீத் கான் கண்டித்துள்ளார். மக்கள் வசிக்கும் பகுதியை தாக்குவது காட்டுமிராண்டித்தனமான செயல் என கூறிய அவர், கிரிக்கெட்டில் ஜொலிக்க எண்ணிய 3 வீரர்களின் உயிரை பாகிஸ்தான் பறித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், Tri-nation series-ல் இருந்து விலகுவதாக ஆப்கன் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவுக்கு அவர் ஆதரவளித்துள்ளார்.
News October 18, 2025
தனியார் பல்கலை சட்ட திருத்தத்திற்கு TTV எதிர்ப்பு

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலை.,களாக மாற்றும் சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற டிடிவி வலியுறுத்தியுள்ளார். இச்சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும். அதோடு, கல்விக் கட்டணமும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News October 18, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹13,000 குறைந்தது

<<18038727>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக் கொண்டு உயர்ந்து வந்த வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹13,000 குறைந்துள்ளது. இதனால், 1 கிராம் 190-க்கும், பார் வெள்ளி 1 கிலோ 1,90,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 1-ம் தேதி 1 கிராம் வெள்ளி ₹161-க்கு விற்பனையான நிலையில், கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத உச்சமாக ₹207-ஐ தொட்டது. இதனால், பலரும் வெள்ளியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வந்தனர்.