News December 29, 2024
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு புதிய தொழில் பயிற்சி திட்டம்

பாலிடெக்னிக் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க, ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் என 450க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக்குகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அந்தத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
உலகின் முதல் AI அமைச்சர்!

உலகிலேயே முதல்முறையாக AI அமைச்சரை அல்பேனிய அரசு நியமித்துள்ளது. Diella (அல்பேனிய மொழியில் சூரியன்) என பெயர் கொண்ட இந்த பெண் AI அமைச்சர், தனியாருக்கு வழங்கப்படும் அரசின் டெண்டர் விவகாரங்களை மேற்பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையான நிர்வாக காரணங்களுக்காக Diella நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவிற்கு 27 ஆண்டுகள் + 3 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீவிர வலதுசாரியான போல்சனரோ, கடந்த 2022 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, தற்போதைய ஆட்சியை கவிழ்த்து, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
‘லோகா’ யுனிவர்ஸில் புதிய ஹீரோக்கள் வந்தாச்சு

பெரும் எதிர்பார்ப்பு இன்றி வெளியான மலையாள மொழி படம் ‘லோகா’, ₹200 கோடியை தாண்டி வசூலை வாரிக்குவித்தது. இதனையடுத்து, இந்த படம் 5 பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதில், ‘சார்லி ஒடியன்’ என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும், ‘மைக்கேல் ஜாதன்’ என்ற கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடிக்கவுள்ளதாகவும் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. ‘லோகா’ யுனிவர்ஸ் எப்படி இருக்கிறது?