News March 15, 2025
கொரோனா மாதிரியே புதிய வைரஸ்

கொரோனா போலவே மனிதர்களை பாதிக்கக்கூடிய புதிய வைரசினை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வவ்வால்களின் மீது நடத்தப்பட்ட சோதனையில், HKU5-CoV-2 என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது, 2019ஆம் ஆண்டு உலகைத் தாக்கிய கொரோனா வைரஸ் போலவே தோற்றம் கொண்டிருப்பது, ஆய்வாளர்களை அச்சமடையச் செய்துள்ளது. ஹாங்காங் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், கூடுதல் ஆய்வுகளுக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2025
பிரேமலதா பேசத் தயங்குவது ஏன்?

அதிமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு மாநிலங்களவை MP சீட் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக முன்பு செய்தி வெளியானது. ஆனால், எந்த வாக்குறுதியும் தரவில்லை என அதிமுக தலைமை தற்போது கூறிய நிலையில், அதற்கு தேமுதிகவினர் நேரடியாக எதிர்வினை ஆற்றவில்லை. 2026 தேர்தல் கணக்கா (அ) வேறு விஷயத்தால் பிரேமலதா பேசத் தயங்குகிறாரா என கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
News March 16, 2025
8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: மனிதம் எங்கே?

வங்கதேசத்தின் மகுரா நகரில், 8 வயது சிறுமி, தன் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளாள். அப்போது அங்கிருந்த அக்காள் கணவரின் சகோதரன், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், 3 முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் சிறுமி உயிரிழந்தாள். இதையடுத்து, எந்த குழந்தைக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது என, நீதிகோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
News March 16, 2025
அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்: லிங்குசாமி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தின் உழைப்பு, அர்ப்பணிப்பு குறித்து இயக்குநர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். படத்தின் டப்பிங்கிற்காக 50 தடவை பேசச் சொன்னாலும் அஜித் பேசுவார் என அவர் தெரிவித்துள்ளார். அஜித்தின் வெற்றிக்கும், தமிழ் சினிமாவில் அவர் முதல் இடத்தில் இருப்பதற்கும் அதுவே காரணம் என லிங்குசாமி தெரிவித்துள்ளார். அஜித்தின் ஜீ படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார்.