News October 12, 2025
அரசன் படத்தின் புதிய அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ அக். 17-ம் தேதி காலை 10.07-க்கு யூடியூபில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. முன்னதாக அக்.16-ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வெற்றிமாறன், சிம்புவுடன் இசையமைப்பாளர் அனிருத் முதல்முறையாக கைகோர்க்கிறார்.
Similar News
News October 12, 2025
மழைக்காலத்தில் சாப்பிட ‘ருசியான ஸ்நாக்ஸ்’

கையில் டீ, மழைத் துளிகளின் ஓசை, மெல்லிய இசை, மனதுக்கு அமைதியை கொடுக்கும் மண்வாசனை என மழைக்காலத்தின் மாலை வேளைக்கு இணை எதுவும் இல்லை. அழகான மாலை வேளைக்கு, மேலும் அழகை கொடுப்பது நம் கையில் வைத்திருக்கும் ஸ்நாக்ஸ் தான். மழைக்காலத்தில் என்னென்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று மேலே உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்தது எது என்று கமெண்ட் செய்யுங்கள்.
News October 12, 2025
பரப்புரை பயணத்தை தொடங்கிய நயினார்

2026 தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை நாயினார் நாகேந்திரன் மதுரையில் தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
News October 12, 2025
கரூர் துயரம்: பணத்துக்காக CBI விசாரணையா?

கரூர் துயரில் உயிரிழந்த 10 வயது சிறுவனின் தந்தை CBI விசாரணை கோரி SC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால், குழந்தை பிறந்த ஒரே ஆண்டில் தன்னை விட்டுச் சென்ற கணவர், பணத்திற்காகவே வழக்கு போட்டுள்ளதாக, சிறுவனின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மகனின் வயதை கூட 13 என தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறிய அவர், இறுதிச் சடங்கிற்கு கூட வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.