News August 12, 2024
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் புதிய அப்டேட்

சீனு ராமசாமி இயக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கவுள்ளனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் நிலையில், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
Similar News
News April 3, 2026
அரியலூர்: ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News April 3, 2026
விஜய் மத அரசியல் செய்கிறார்: கருணாஸ்

பாஜகவை விட மோசமான மத அரசியலை விஜய் செய்வதாக கருணாஸ் சாடியுள்ளார். இத்தனை நாள்கள் தன்னுடைய மத அடையாளத்தை விஜய் காட்டவில்லை என்ற அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னை ஜோசப் விஜய் என அடையாளம் காட்டுவது ஏன் என மக்கள் கேட்பதாகவும் கூறியுள்ளார். கூட்டத்தை வைத்து வெற்றியை முடிவு செய்ய முடியாது; கரகாட்டம் நடந்தால் கூட கூட்டம் வரும் என்பதால் வாக்குகளே வெற்றிக்கு முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 3, 2026
விஜய்க்கு வாக்களிப்பேன்.. பிரபல நடிகை அறிவித்தார்

வரும் தேர்தலில் விஜய்க்கு வாக்களிப்பேன் என நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே விஜய்யை பற்றி பேசுவதாகவும், இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்காத போதும் கோடிக் கணக்கான மக்கள் விஜய்யுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் தேர்தலில் அனைவரும் அவருக்கு வாக்களிக்க காத்திருக்கின்றனர்; ஒரு ரசிகையாக தானும் காத்திருக்கிறேன் எனவும் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.


