News July 3, 2024

‘கூலி’ படத்தின் புதிய அப்டேட்

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இதுவரை நடிகர் சத்யராஜ் மட்டுமே படக்குழுவில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் லோகேஷுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Similar News

News November 19, 2025

தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

தேனி மாவட்டத்தில், சின்னமனூர், கம்பம், தேனி, காமாட்சிபுரம் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (நவ.19) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மேற்கண்ட பகுதிகளின் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 19, 2025

இராம்நாடு: 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது போக்சோ

image

இராமநாதபுரம் சமூக நீதி விடுதியில் 7ம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்தும், மாணவரை சாதி பெயர் சொல்லி மிரட்டியதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது எஸ்.டி,எஸ்.சி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

News November 19, 2025

வரலாற்றில் இன்று

image

1917 – முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள்.
1946 – ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1961 – நடிகர் விவேக் பிறந்தநாள்.
1976 – நடிகர் அருண் விஜய் பிறந்த தினம்.
1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது.
2008 – நடிகர் எம். என். நம்பியார் மறைந்தநாள்.

error: Content is protected !!