News August 10, 2025
பிஹாரில் புதுவித மோசடி.. தேஜஸ்வி

தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் 3 லட்சம் வாக்காளர்களின் வீட்டு எண் ‘0’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். EC-யின் வேலை இங்கு பிஹாரில் பலிக்காது எனக் கூறிய அவர், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் கேலிக்கூத்தாக இல்லையா என கேள்வி எழுப்பினார். மேலும், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், புகார் தந்தால், ஆலோசனை கூறினால் EC கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News August 12, 2025
புதிய வருமான வரி மசோதா 2 அவைகளிலும் நிறைவேறியது

புதிய வருமான வரி மசோதாவில் புதியதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை என FM நிர்மலா கூறியுள்ளார். *LIC, பென்ஷன் போன்ற நிதி திட்டங்களில் இருந்து கிடைக்கும் தொகைக்கு, இனி முழுமையாக வரி விலக்கு கிடைக்கும். *சிறு, குறு நிறுவனங்களின் வரி வரையறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. *வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்த பின்னரும், அபராதம் செலுத்தாமல் TDS தொகையை திரும்ப பெற முடியும். SHARE IT.
News August 12, 2025
திமுகவில் இணைந்த OPS அணி மா.செ., ஆயில் ரமேஷ்!

கரூர் மேற்கு மாவட்ட அதிமுக(OPS அணி) செயலாளர் ஆயில் ரமேஷ் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அதேபோல், அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரண்ராஜ், கவின், சிவபாலன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் மாற்றுக் கட்சியினர் பலரையும் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்து வருகிறார்.
News August 12, 2025
பெண்கள் இறுக்கமாக அணிந்தால்… அலர்ட்

பெண்களின் ஃபேவரைட் உடைகளில் ஒன்றான `ஸ்கின்னி’ ஜீன்ஸ் பேன்ட் அணிவது, கருப்பைத் தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இடுப்புப் பகுதியில் வெப்பத்தை இது அதிகரிக்கிறது. மேலும் மாதவிலக்கு பிரச்னைகள், பூஞ்சை தொற்று, சிறுநீர்பாதை தொற்று, தசைகள் – நரம்புகள் சேதமடைதல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பையும் இது அதிகரிக்கிறதாம்.