News March 17, 2024
சென்னையில் புதிய டாஸ்மாக் கடை மூடல்

சென்னை முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.
Similar News
News August 7, 2025
மெரினாவில் இதற்கு தடை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசாபுரம் வரை உள்ள பகுதியில், கடைகள் அமைக்கவும் வியாபாரம் செய்யவும் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதை குறிப்பிடும் வகையில், பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி அங்கு கடைகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
சென்னை மக்களே சான்றிதழ் தொலைந்துவிட்டதா?

சென்னை மக்களே, வருவாய்துறையின் கீழ் பெறப்படும் சாதி சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த <
News August 7, 2025
என்னென்ன சான்றிதழ்களை பெறலாம்

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச்சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு-குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் மற்றும் வேலையில்லாதோர் சான்றிதழ் ஆகியவற்றை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க