News March 20, 2024
புதிய தமிழகம் தென்காசியில் போட்டி

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் பு.த.க சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தனுஷ் எம் குமாரிடம் தோல்வியடைந்தார். இந்த முறை பு.த.க சார்பில் கிருஷ்ணசாமியே மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
Similar News
News February 9, 2026
17 வயது நடிகையை மணந்த நடிகர் டைகர் பிரபாகர்

‘உதிரிப்பூக்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அஞ்சுவின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. 17 வயதில் நடிகர் டைகர் பிரபாகரை அவர் திருமணம் செய்துள்ளார். அப்போது, டைகர் பிரபாகரின் வயது 48. மேலும், அவருக்கு இது 4-வது திருமணம். முந்தைய திருமணங்கள் மூலம் பிறந்த மகன்கள், பேபி அஞ்சுவை விட வயதில் மூத்தவர்களாம். இதெல்லாம் தெரிந்த பிறகு டைகர் பிரபாகரை அஞ்சு பிரிந்துவிட்டாராம். SO SAD.
News February 9, 2026
பிப்ரவரி 17-ல் ‘நெருப்பு வளைய’ சூரிய கிரகணம்!

2026-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் பிப்ரவரி 17-ல் நிகழவுள்ளது. அன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணம், ‘நெருப்பு வளைய’ கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நேராகக் கடந்து செல்லும்போது இந்த கிரகணம் நிகழ்கிறது. மதியம் 3.26 மணி முதல் மாலை 7.57 மணி வரை நீடிக்கும் இந்த வானியல் நிகழ்வு முக்கியமாக அண்டார்டிகாவில் தெரியும். இந்தியாவில் இதனை காண முடியாது.
News February 9, 2026
9 நாள்கள் நடந்த தமிழக தேர்தல்.. எப்போது தெரியுமா?

17-வது சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இதுவரை நடந்த 16 பேரவைத் தேர்தல்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடைபெற்றன, எத்தனை கட்டங்களாக நடைபெற்றன என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப் பக்கமாக ஸ்வைப் செய்து அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் எந்த தேர்தலில் உங்கள் முதல் வாக்கை செலுத்துனீர்கள், அப்போது யார் ஆட்சி அமைத்தது என்று கமெண்ட் பண்ணுங்க.


