News March 12, 2025
டெல்லியில் புதிய சேவை அறிமுகம்

டெல்லியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், படகு சவாரி அறிமுகம் செய்யும் திட்டம் கையெழுத்தாகியுள்ளது. முதற்கட்டமாக சோனியா விகார் – ஜகத்பூர் இடையே 4 கி.மீ. தூரத்துக்கு இந்த சேவை தொடங்கப்படுகிறது. மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை இது கொடுக்கும் என டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார். அதேபோல் டெல்லிக்கு படகு சவாரி புதிய அடையாளத்தை கொடுக்கும் என முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.
Similar News
News March 12, 2025
விரைவில் வருகிறது ஸ்மார்ட் மீட்டர்கள்

3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. மாநிலம் முழுவதும் 2026ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனையடுத்து, ₹20,000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் மின் கணக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும்.
News March 12, 2025
120 கோடியை நெருங்கும் செல்போன் பயனர்கள்

நாட்டில் செல்போன் பயனர்கள் எண்ணிக்கை 120 கோடியை நெருங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாத செல்போன் பயனர்கள் எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில் நாடு முழுவதும் மொத்தம் 118 கோடியே 99 லட்சம் பயனாளர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் எண்ணிக்கை 50.4%, ஏர்டெல் பயனர்கள் எண்ணிக்கை 30.6%, வோடாபோன் பயனர்கள் எண்ணிக்கை 13.4% எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2025
சுற்றுலாத்தலமாக மாறிய Deep Seek நிறுவனரின் கிராமம்

CHAT GPT உள்பட பல AI தொழில்நுட்பங்களை பின்னுக்குத் தள்ளி, சீனாவை சேர்ந்த Deep Seek செயலி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக செயலியை உருவாக்கிய லியாங் வென்ஃபெங் பிரபலம் அடைந்த நிலையில், தற்போது அவரின் சொந்த கிராமமான மிலிலிங் சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் அங்கு செல்கின்றனர். நினைவு சின்னமாக, அங்கிருந்து கற்களை எடுத்துச் செல்கின்றனர்.