News April 6, 2025
ஆப்பிள் நிறுவனம் பெயரில் புதிய ஸ்கேம்

பிட்-காயின் புகழடைந்த பின் பல டிஜிட்டல் கரன்ஸிக்கள் முளைக்கத் தொடங்கின. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை முதலீட்டாளர்களின் பணத்தை வாரி சுருட்டிக் கொண்டு ஓடிய ஸ்கேமாகவே இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் iToken என்ற பெயரில் புதிய க்ரிப்டோ அறிமுகமாகியிருக்கிறது. ஆனால், இதற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. உஷாராக இருங்க மக்களே.
Similar News
News August 10, 2025
பண்ட் போன்று காயத்துடனே விளையாடிய இந்திய வீரர்

ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் காயம் ஏற்பட்டாலும் களத்தில் இறங்கி போராடிய பண்ட், வோக்ஸ் ஆகியோரின் அரிப்பணிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் இந்திய வீரர் கருண் நாயரும் விரலில் சிறியளவிலான எலும்பு முறிவுடனே 5-வது டெஸ்டின் 2-வது இன்னிங்க்ஸ்-க்கு பேட்டிங் செய்ய வந்ததாக கூறப்படுகிறது. இக்காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் துலிப் டிராபி தொடரை அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News August 10, 2025
இந்திய உணவுமுறையே சிறந்தது

பெரிய பொருளாதாரங்களான G20 நாடுகளிலேயே, இந்தியாவின் உணவுமுறை தான் சிறந்ததாக உள்ளதாக WWF அமைப்பின் லிவிங் பிளானட் அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய உணவு நுகர்வு முறை தான் சுற்றுச்சூழல் நலத்துக்கு உகந்ததாக இருப்பதாகவும், மற்ற நாடுகள் இதை பின்பற்றினால் புவி வெப்பமயமாதலை கூட குறைக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. USA, AUSTRALIA, ARGENTINA நாடுகளின் உணவுமுறை மிகவும் மோசமாக உள்ளதாம்.
News August 9, 2025
MGR-யை அவமதிக்கும் நோக்கமில்லை: திருமாவளவன்

திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் MGR என்ற விமர்சனம் உண்டு என <<17349030>>திருமாவளவன்<<>> தெரிவித்தார். இதற்கு <<17351092>>அதிமுகவினர் கடும் எதிர்ப்பு<<>> தெரிவித்தனர். இதுபற்றி பேசிய திருமா, தமிழக அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கியது என்ற உரையில் MGR-யை குறிப்பிட்டனே தவிர, அவரை அவமதிக்கும் நோக்கமில்லை என்றார். MGR-யை ஒரு சாதிக்குள் சுருக்கவில்லை, அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.