News March 29, 2025
இனி பட ஷூட்டிங்கிற்கு வந்த புதிய விதிமுறைகள்!

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்துவது என, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது பெப்சியின் நீண்டகால கோரிக்கையாகும். இந்த மறுசீரமைப்பு விதிகள் வரும் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்த் திரை ஊழியர்கள் அதிகளவில் பயனடைவார்கள் என்றும் சொல்கின்றனர்.
Similar News
News March 31, 2025
நடிகர் விஜய் இரங்கல்

உடல் நலக்குறைவால் உயிரிழந்த தவெக செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சூரிய நாராயணின் குடும்பத்தினரிடம் விஜய் போனில் இரங்கல் தெரிவித்துள்ளார். வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல் செங்கல்பட்டு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
News March 31, 2025
நாயுடன் உடலுறவு வைத்த பெண் கைது…!

வளர்ப்பு நாயிடம் அத்துமீறியதால் இளம்பெண் ஒருவர் கம்பி எண்ணிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த குமின்ஸ்கி என்ற இளம்பெண், தன்னை Dog Mom என அழைத்துக் கொண்டு வளர்ப்பு நாயுடன் பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சை ஆனதால், விலங்குடன் உடலுறவு வைத்தல், அதனை படம் பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 31, 2025
யார் இந்த அஸ்வனி குமார்?

KKR அணிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் மும்பை வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வெறும் 23 வயதாகும் இவருக்கு இதுதான் முதல் போட்டியாகும். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், முதல் போட்டியிலேயே, 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருக்கிறார். மும்பை அணி இவரை வெறும் 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.