News September 17, 2025
யூடியூபில் போலி செய்திகளை தடுக்க லைசன்ஸ் முறை

யூடியூப்பில் வலம்வரும் செய்தி சேனல்களில் பல போலி செய்திகள் வெளியிடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையில், TV சேனல்களை போல யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் லைசன்ஸ் பெறுவதை கட்டாயமாக்கும் திட்டத்தை கொண்டுவர கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக CM சித்தராமையா தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் இதுபோன்ற விதிமுறை தேவையா? Comment பண்ணுங்க.
Similar News
News September 17, 2025
தேர்தல் ஆணையத்திலும் பொய் சொன்ன அன்புமணி: ராமதாஸ்

PMK தலைவராக அன்புமணியை அங்கீகரிக்கும் கடிதத்தை தேர்தல் ஆணையம் (ECI) திரும்பப் பெற வேண்டும் என ராமதாஸ் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையிலும், PMK தலைவராக அன்புமணியையே ECI அங்கீகரித்ததால் மீண்டும் உரசல் ஏற்பட்டது. இந்நிலையில், ECI கதவை தட்டியுள்ள ராமதாஸ் தரப்பு, பிஹாரில் போட்டியிடுவதாக பொய் சொல்லி அன்புமணி அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் சாடியுள்ளது.
News September 17, 2025
பிரதமர் மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடி, தொடர்ந்து 11 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார். அவரது மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடிப்படை ஊதியம்(₹50,000), பார்லிமெண்ட் அலவன்ஸ்(₹45,000), தினசரி அலவன்ஸ்(₹2,000), இதர செலவுகளுக்கான அலவன்ஸ் (₹3,000) உடன் மாத சம்பளமாக, அவர் ₹1.66 லட்சம் பெறுகிறார். மேலும், ஆடம்பரமான அரசு பங்களா, SPG கமாண்டோ பாதுகாப்பு, சிறப்பு விமானம் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும்.
News September 17, 2025
வசூலை அள்ளிய பட்ஜெட் படங்கள்

சமீப காலமாக குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் எதிர்பாராத விதமாக ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் எந்தெந்த குறைந்த பட்ஜெட் படங்கள், எவ்வளவு வசூலை அள்ளியது என்பது மேலே போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்கள். அதை தவிர வேறு ஏதேனும் படம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.