News January 8, 2025
சபரிமலை செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு

சபரிமலை பக்தர்கள் கானகப் பாதையாக ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். தேக்கடி பெரியார் புலிகள் காப்பக மேற்குப் பிரிவு இணை இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில் கானகப் பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு அனுமதி 1 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். முன்னர் மதியம் 1 மணி வரை சத்திரம் – புல்லுமேடு வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.
Similar News
News September 14, 2025
கோயில் பணம் எங்கு செல்கிறது: அரசு விளக்கம்

கோயில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கோயில்களுக்கே செலவிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ₹445 கோடி கோயில் உண்டியல் பணத்தை பிற மத வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு அரசு செலவு செய்வதாக செய்தி பரவியது. இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், கோயில் உண்டியல் பணத்தை இந்து சமயம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே அரசு செலவு செய்வதாகவும் கூறியுள்ளது.
News September 14, 2025
IND Vs PAK.. சூடுபிடிக்கும் ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காயம் காரணமாக கில் விளையாட தவறினால் இந்திய பிளேயிங் 11-ல் ரிங்கு இடம்பெறுவார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இந்தியா வலுவாக காணப்பட்டாலும், பாகிஸ்தான் நிச்சயம் கடுமையாக போட்டிபோடும். Head to Head= 13 போட்டிகள், வெற்றி= 10 இந்தியா, 3 பாகிஸ்தான். இதில் இந்தியா வென்றால் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறும்.
News September 14, 2025
நார்ச்சத்து நிறைந்த டாப்-5 உணவுகள்

நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணிக்க நார்ச்சத்து மிக அவசியமானது. இது இரத்த சர்க்கரை அளவுகளை நிர்வகிப்பதிலும், கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாடம் நாம் 25-40 கிராம் நார்ச்சத்து எடுத்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நார்ச்சத்து எடுக்க தவறினால் வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும். நார்ச்சத்து கிடைக்க சாப்பிட வேண்டிய டாப் -5 உணவுகளை தெரிஞ்சுக்கோங்க. SWIPE IMAGES.