News September 14, 2024
‘கங்குவா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி?

நடிகர் சூர்யா – இயக்குனர் சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முதலில் அக்., 10இல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதே தேதியில் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ வெளியாவதால் அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்த திரைப்படம் நவ.,14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 21, 2025
பிஹார் தேர்தலில் இருந்து பின்வாங்கிய ஹேமந்த் சோரன்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், RJD-யுடன் இணைந்து ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரனின் முக்தி மோச்சா கட்சி இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு சரியாக அமையாததால், தனித்து 6 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக ஹேமந்த் சோரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிஹார் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி சார்ப்பில் திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News October 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 21, ஐப்பசி 4 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 8:00 AM – 9:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News October 21, 2025
ஹரிஷ் கல்யாணம் படத்துக்கு ஜிவி பாராட்டு

‘பைசன்’, ‘டியூட்’ படங்களுடன் தீபாவளி ரேஸில் ஹரிஷ் கல்யாணின் டீசலும் களம் கண்டது. ‘பைசன்’,‘டியூட்’ படங்கள் வசூலை அள்ளி வரும் நிலையில் டீசல் சற்று பின்தங்கியுள்ளது. இந்நிலையில் ‘டீசல்’ படத்தை பார்த்து ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என அவர் பதிவிட்டுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்ற பெயரை ஹரிஷ் தக்க வைத்துள்ளார்.


