News August 5, 2024
புதிய சாதனை படைத்த எரிவாயு உற்பத்தி

எரிவாயு உற்பத்தித்துறை புதிய சாதனை படைத்துள்ளதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 2020-21இல் 28.7 BCM ஆக இருந்த எரிவாயு உற்பத்தி, 2023-24இல் 36.43 BCM ஆக அதிகரித்துள்ளதாகவும், 2026இல் 45.3 BCM ஆக அதிகரிக்கும் எனவும், தனது X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதை ரீட்வீட் செய்துள்ள பிரதமர், வளர்ந்த இந்தியாவுக்கு எரிசக்தித்துறையின் தன்னிறைவு முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 5, 2026
எரிவாயு விநியோகத்தை குறைக்க முடிவு: GAIL

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியாவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக GAIL நிறுவனம் தெரிவித்துள்ளது. கத்தாரில் இருந்து இந்தியா ஆண்டுதோறும் பெருமளவு LNG எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது ஹார்முஸ் நீரிணை மூடல், போர் தாக்கம் காரணமாக இறக்குமதி தடைபட்டுள்ள நிலையில், தங்களது LNG எரிவாயு விநியோகத்தை குறைக்க உள்ளதாக GAIL அறிவித்துள்ளது.
News March 5, 2026
கையாலாகாத பொம்மை CM ஸ்டாலின்: EPS

சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய CM, ஒரு கையாலாகாத பொம்மை CM-மாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். நாங்குநேரி கொலை சம்பவத்தின் ரத்த ஈரம் காய்வதற்குள் இடைக்காட்டூரில் மற்றொரு கொலை நடந்துள்ளதாக கூறிய அவர், அரசை கண்டு குற்றவாளிகள் பயப்படவில்லை என்றார். மேலும், பட்டியலின மக்கள் பகுதியில் தாக்குதல் நடக்கிறது என்றால், திமுக இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது என்று தானே அர்த்தம் எனவும் கேட்டுள்ளார்.
News March 5, 2026
BREAKING: மேற்குவங்க கவர்னர் திடீர் ராஜினாமா

மேற்குவங்க கவர்னர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்த போஸ் அறிவித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொடர்ந்து மோதல்போக்கை கடைபிடித்துவந்த அவர், ஓரிரு மாதங்களில் பதவிக் காலம் முடிவடையவிருந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு ஆனந்த போஸ் அனுப்பியுள்ளார். மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கவர்னர் பதவி விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


