News April 7, 2024
மும்பை அணி புதிய சாதனை

டி20 போட்டிகளில் 150 வெற்றிகள் பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கிறது. இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் 148 வெற்றிகளுடன் சிஎஸ்கே அணியும் மூன்றாவது இடத்தில் 144 வெற்றிகளுடன் இந்திய அணியும் உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த அணி எது?
Similar News
News July 6, 2025
தம்பதியரே, எச்சரிக்கையா இருங்க…

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் செக்ஸ் செயல்திறனும் குறையக்கூடும்.
News July 6, 2025
சிவசேனாவை போல் பாமகவை உடைக்க பாஜக முயற்சி: KS

மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது போல் பாமகவை உடைக்க பாஜக முயல்வதாக கே.செல்வப்பெருந்தகை(KS) குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸை சந்தித்த பிறகு திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க செல்வப்பெருந்தகை முயல்வதாக கருத்து எழுந்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் – விசிக இரண்டாம் கட்டத் தலைவர்கள் X தளத்தில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் பாமகவுக்கு ஆதரவான பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
News July 6, 2025
புதிய ரேஷன் கார்டுகள்… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருப்பவர்கள் ஏராளம். ஆனால், புது ரேஷன் கார்டு பெற ஈசியான வழி கிடைத்துள்ளது. ஜூலை 15-ல் தொடங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீர்வு காண CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த முகாம்களில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் அளித்தால் உடனே அரசு ஒப்புதல் வழங்கும் எனக் கூறப்படுகிறது. உடனே முந்துங்கள். SHARE IT.