News May 1, 2024

ஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்

image

மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் 2.24 லட்சம் குடும்பங்களுக்கும், ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள், திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய கார்டு தடையின்றி கிடைக்கும் எனத் தெரிகிறது.

Similar News

News March 9, 2026

தமிழக தேர்தல்: வங்கிகளின் கெடுபிடியால் மக்கள் அவதி!

image

TN தேர்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை வங்கிகள் விதித்துள்ளன. வங்கிகளின் பிரதிநிதிகளாக உள்ள BC-க்கு(Business Correspondent) வழங்கப்படும் தொகை குறைக்கப்பட்டுள்ளது. BC-க்கு நாளொன்றுக்கு ₹1,00,000, தனி நபருக்கு ₹5,000 மட்டுமே வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக கிராமப்புற மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News March 9, 2026

விஜய் போட்டியிடும் தொகுதி இறுதியானது

image

தவெக <<19333933>>வேட்பாளர்கள் <<>>பட்டியல் இறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிட உள்ளதாகவும், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், ஸ்ரீரங்கத்தில் கு.ப.கிருஷ்ணன், கரூரில் மதியழகன், கோபியில் செங்கோட்டையன், வில்லிவாக்கத்தில் ஆதவ், மயிலாப்பூரில் வெங்கட்ராமன், எழும்பூரில் ராஜ்மோகன், அம்பத்தூரில் ஜே.சி.டி பிரபாகர் களம் காண இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 9, 2026

பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் விளக்கம்

image

கச்சா எண்ணெய் இருப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புடன் இருப்பதாக ராஜ்யசபாவில் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேற்காசிய போர் குறித்து பேசிய அவர், போரை PM மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், டெஹ்ரானில் உள்ள தூதரகம் இந்தியர்களை பாதுகாக்க முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் மேற்காசிய நாடுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் அவர் கூறினார்.

error: Content is protected !!